• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உருவாகிறதா ’படையப்பா 2’ திரைப்படம்?

July 19, 2018 tamilsamayam.com

நீலாம்பரி வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை,இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்து பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காலா’.இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.ஏற்கனவே நடித்து முடித்த,ஷங்கர் இயக்கத்தில் உருவான ’2.0’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எனவே இதனுடன் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு,ரஜினி தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது ரஜினி சம்மதித்து இருக்கும் படத்திற்காக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்,ரம்யா கிருஷ்ணனை சந்தித்துள்ளார்.ஆகையால் ’படையப்பா 2’ படம் உருவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக காலா படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, தனக்கு சவால் நிறைந்த கதாபாத்திரங்கள் பாட்ஷா ஆண்டனி,படையப்பா நீலாம்பரி,காலா நானா படேகர் என்றார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து,படையப்பா,லிங்கா ஆகிய படங்களில் ரஜினி நடித்திருந்தார்.

அதில் லிங்கா படம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.இதையடுத்து ஜக்குபாய்,ராணா படங்களில் இருவரும் கூட்டு சேர்வதாக கூறப்பட்டது.ஆனால் அவை பொய்த்துப் போயின.எனவே ‘படையப்பா 2’ மூலம் மீண்டும் ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி உருவாகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க