• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமி பாலியல் வன்கொடுமை பார்த்திபன் கண்டனம்

July 18, 2018 தண்டோரா குழு

சென்னையில்,11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறுத்தெரியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோர்களுடன் வசித்து வந்த 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்த 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதையடுத்து,கைது செய்யப்பட்ட 17 பேரை போலீசார் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில்,மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் ட்விட் செய்துள்ளார்.

அதில்,

இந்த நிமிடம்
இதே மணிக்கு
இங்கோ அங்கோ எங்கோ
ஒரு பாலியல் வன் கொடுமை
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது…
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய
நிகழ்வை பார்த்தபடி!!!
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த
ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர்,
ஈக்களாய் மொய்த்துக்
கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே நம் கண்களையும், காதுகளையும்
கூர்மையாக்கி, ____-க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!

மேலும் படிக்க