• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நா. முத்துகுமார் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி

July 17, 2018 தண்டோரா குழு

கதாநாயகியை முன்னிலைப்படுத்தி அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்,நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா.இப்படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன்,அறந்தாங்கி நிஷா,தொலைக்காட்சி பிரபலம் ஜாக்குலின்,நவீன் குமார்,உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம்,கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 வெளியாகவுள்ள ஆகஸ்ட் 10ம் தேதியன்று வெளியாக இருக்கிறது.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் முதல்முறையாக பாடல் எழுதியுள்ளார்.அதைபோல் விக்னேஷ் சிவன்,அருண்ராஜா,காமராஜ் ஆகியோரும் பாடல்களை எழுதியுள்ளனர்.இதில்,சிவகார்த்திகேயன் எழுதிய “கல்யாண வயசு” எனும் பாடலினை கடந்த மே 17ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர்.இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,பாடல் எழுதியதற்காக லைகா நிறுவனம் கொடுத்த சம்பளத்தை சிவகார்த்திகேயன் தன் மனைவியிடம் கொடுத்து நா.முத்துக்குமார் மனைவியிடம் கொடுக்க சொல்லிருக்கிறாராம். ஏனெனில்,சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினாவில் நா.முத்துக்குமார் 3 பாடல்களை எழுதியது தான் இதற்கு காரணமாம்.இதனால் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக சிவகார்த்திகேயன் இந்த செயலை செய்திருக்கிறார்.

மேலும் படிக்க