• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட்- கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

July 16, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்,உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில்,”நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியபோது,அதில் 49 வினா-விடைகள் தவறாக இருந்தன.இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைப்பதால்,தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே,மாணவர்களின் நலன் கருதி தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்கவும்,நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம்,இந்த வழக்கில் 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க உத்திரவிட்டது.மேலும்,எம்பிபிஎஸ் படிப்பில் சேர புதிய தரவரிசை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட வேண்டும் என CBSE-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.அதைப்போல் புதிய தர வரிசை பட்டியலை வெளியிடும் வரை MBBS கவுன்சிலிடிங்கை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யுமாறு சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.அந்த மனுவில்,முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில்,மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே,உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும்,2ம் கட்ட கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க