• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியை கண்டித்து காவல்துறையின் தடையை மீறி திமுக ஆர்பாட்டம்

July 6, 2018 தண்டோரா குழு

கோவை நகரின் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான அனுமதியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறி கோவை மாநகராட்சியை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், கோவை மக்களின் கனவு திட்டமான 24 மணி நேர குடிநீர் சேவைக்கான பராமரிப்பு பணிகளை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியது கண்டனத்துக்கு உரியது என்றும்,
மத்திய அரசின் நிதி உதவி பெற்று மாநில அரசின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,மாநகராட்சி என அரசு நிறுவனத்தின் மூலம் திட்டத்தை செயல்படுத்தாமல் வரலாற்றில் இல்லாதவாறு தனியார் மூலம் குடிநீர் விநியோகத்தை செயல்படுத்துவது ஏற்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும்,பொதுமக்களின் கருத்துக்கேட்பு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்வதாகவும்,திட்டம் தொடர்பான தகவல்களை முழுமையாக தெளிவாக வெளியிட தயங்குவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.இதையடுத்து,காவல்துறையினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மேலும் படிக்க