• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடத்துநர் இல்லாத அரசு பேருந்துக்கள் பயணிகள் வரவேற்பு

July 5, 2018 தண்டோரா குழு

கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத அரசு பேருந்து இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இச்சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இன்று துவங்கி வைத்தார்.

முதல் கட்டமாக கோவையிலிருந்து சேலத்திற்கு 5 பேருந்துகள் இயக்கப்பட்டது.பயணிகளை கவர கூடிய வகையில் பேருந்துகள்,தனியார் பேருந்துகள் போல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் முன் சீட்டு பயணிகளுக்கு சீட் பெல்ட் பொருத்தப்பட்டுள்ளது.அதே போல் அவசர கால கதவுகளும் பயணிகள் எளிதில் பயன்படுத்த கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.கோவையிலிருந்து சேலத்திற்கு 155 ரூபாய் இந்த பேருந்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

முதல் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வந்தவுடன்,சேலம் செல்லக்கூடிய பயணிகளா என்பதை உறுதி செய்தவுடன் பயணிகள் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.அதன் பின் வரும் நடத்துனர் டிக்கெட் கொடுக்கிறார்.அதன் பின் அவர் இறக்கியவுடன் கதவுகள் முழுமையாக அடைப்படுகிறது.ஆனால் சேலம் வரையில் எந்த பயணிகளும் ஏற்றபடுவதில்லை.மேலும்,அதிகமாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் பயண நேரம் குறைவதாக பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க