• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சங்கர் மகாதேவனை வியக்க வைத்த சாமானிய பாடகருக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்

July 2, 2018 தண்டோரா குழு

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்.இப்படத்தில் இடம்பெற்ற ‘உனைக் காணாத நாள்’ என தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சங்கர் மகாதேவன் பாடியிருந்த இப்பாடலை முகம் தெரியாத சாதாரண நபர் ஒருவர் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு அதே குரலில் மிகத்திறமையாக பாடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதற்கடையில், இந்த வீடியோவை பார்த்த பாடகர் சங்கர் மகாதேவன் அந்த நபரைப் பற்றிய தகவல்களை தனக்குத் தருமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில்,இவரை நான் எப்படி கண்டுபிடிப்பது? இவருடன் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பமாக இருக்கிறது. இவரைக் கண்டறிய எனக்கு உதவி தேவை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில்,இயக்குனர் விக்னேஷ் சிவன் தோட்டத்தில் அமர்ந்து பாடல் பாடியவர் மிஸ்டர் உன்னி என்று கூறி அவரின் செல்போன் எண்ணை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த விக்ரம் வேதா பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தனது புதிய ஆல்பத்தில் உன்னியை பாட வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க