• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நயன்தாராவிற்கு செம இன்ப அதிர்ச்சி கொடுத்த தல அஜித்

July 2, 2018 தண்டோரா குழு

வீரம்,வேதாளம்,விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம்.இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் அஜித்துடன் பில்லா,ஏகன்,ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.இப்படத்தில் டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது.விசுவாசம் படத்தில் அஜித்,நயன்தாரா ஆகியோருடன் தம்பிராமையா,விவேக்,யோகி பாபு,ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்ததை அடுத்து தற்போது,விசுவாசம் படக்குழுவினர் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.இப்படப்பிடிப்பில் அஜித், நயன்தாரா என முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில்,தனது சக நடிகர்களுடன் இயல்பாக பழகும் பழக்கம் கொண்ட அஜித்,முதற்கட்ட படப்பிடிப்பின் போது நயன்தாராவிற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்களை ஒன்றாக சேர்ந்து தற்போது அவருக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.இதனை பார்த்த நயன்தாரா சந்தோஷத்தில் மிரண்டு போயுள்ளார்.

மேலும் படிக்க