• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவிற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

June 30, 2018 தண்டோரா குழு

பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் அவன்-இவன். ஆா்யா, விஷால் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை தவறாக சித்தரித்ததாக படம் வெளியானபோதே சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நடுவா் நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக நடிகா் ஆா்யா மற்றும் இயக்குநா் பாலா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அவா்கள் ஆஜராகவில்லை.

பின்னர், பல்வேறு காலகட்டங்களில் நடந்த விசாரணையின்போது ஆஜராகுமாறு உத்தரவிட்டும் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில், நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு எதிராக அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க