• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் கைதி மாரடைப்பால் உயிரிழப்பு

June 30, 2018 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்தார்.திருப்பூரை அடுத்த மடத்துக்குளம்,கடத்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து கடந்த 2010-ம் ஆண்டு மடத்துக்குளம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்த அவர், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

பின்னர் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவை மத்திய சிறையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உடல்
நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஐந்து கைதிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க