• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் திடீர் இடமாற்றம்

June 30, 2018 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் தெற்கு மண்டல காவல் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் முனீஸ்வரன் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.சிங்காநல்லூரில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி சிட்டிபாபு என்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் என்பவர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரண் அடையவுள்ளதாக ஆய்வாளர் முனீஸ்வரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து,முனீஸ்வரன் நீதிமன்றத்திற்குள் புகுந்து சந்தோஷை கைது செய்தார்.இதற்கு திருப்பூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் நீதிமன்ற பணிகளும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில்,இது தொடர்பாக திருப்பூர் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆய்வாளர் முனீஸ்வரன் நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தனர்.இந்த புகாரை பார்த்த தலைமை நீதிபதி,சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் செயலுக்கு அரசு வழக்கறிஞரை அழைத்து கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் தெற்கு மண்டல காவல் துறைக்கு இன்று ஆய்வாளர் முனிஸ்வரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.உடனடியாக தெற்கு மண்டல காவல் துறையில் பணிக்கு சேரும் படி காவல் துறை தலைமையகத்தில் இருந்து ஆய்வாளர் முனீஸ்வரனுக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க