• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 8 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

June 29, 2018 தண்டோரா குழு

கோவையில் பாலவிநாயகர் கோவில் பூட்டை உடைத்து 8 கிலோ வெள்ளி மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோவை லிங்கப்ப செட்டி வீதியில் பாலவிநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் மர்ம நபர்கள் நேற்றிரவு கோவிலின் முன்கேட்டை கம்பியால் நெம்பி பூட்டை உடைக்காமல் திறந்துள்ளனர். இதனையடுத்து உள்ளே இருந்த கேட்டையும் கம்பியால் நெம்பி திறந்துள்ளனர்.சாமியின் நகை மற்றும் பணம் வைத்திருந்த அறைக்கு முன்பு இருந்த சேர் வைத்து தாண்டி குதித்து பீரோவை கம்பியால் நெம்பியுள்ளனர். பீரோவினுள் இருந்த சாமிக்கு அணிவிக்கக்கூடிய 8 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர்.

இதனையடுத்து இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து ஆர்.எஸ்.புரம் குற்றத்தடுப்பு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் பெருமாள் மற்றும் தடய அறிவியல் துறையினர் கைரேகைகளை எடுத்துச்சென்றனர்.காவல் துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க