• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செப்டிக் தொட்டிக்குள் விழுந்த துப்புரவு ஊழியர் உயிரிழப்பு 

June 28, 2018 தண்டோரா குழு

கோவையில் செப்டிக் தொட்டிக்குள் தவறி விழுந்த துப்புரவு பணியாளர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை 100அடி சாலையில் மலையாள சமாஜ் எதிர்புறம் உள்ள வீட்டில் செப்டிக் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஈடுபட்டிருந்தார்.அப்போது,எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.உடனே சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது,மகேந்திரன் தொட்டிக்குள் விழுந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மகேந்திரனை உடனே தொட்டிக்குள் இருந்து மீட்டனர்.ஆனால் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க