• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா37 படப்பிடிப்பு லண்டனில் தொடக்கம்!

June 26, 2018 தண்டோரா குழு

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் சூர்யா37 படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி,ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சாயிஷா ஷைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,இப்படத்தில் மோகன் லால்,அல்லு சிரிஷ்,பாலிவுட் ஸ்டார் பொம்மன் இரானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில் முதற்கட்டமாக, படப்பிடிப்பு லண்டனில் பூஜையுடன் துவங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க