• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசியல் நிலவரம் பற்றி கமல்ஹாசனிடம் ஆலோசனை நடத்தினேன் – ராகுல் காந்தி

June 20, 2018 தண்டோரா குழு

தமிழக அரசியல் நிலவரம் பற்றி கமல்ஹாசனிடம் ஆலோசனை நடத்தினேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன்,அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார்.இதையடுத்து,யாருக்கும் ஆட்சேபம் இருந்தால் அதை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.ஆனால்,யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததையடுத்து, கமல்ஹாசனை தேர்தல் ஆணையம் அழைத்திருந்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் அங்கீகாரம் பெறுவது தொடர்பாக கமல்ஹாசன் இன்று டெல்லி சென்றார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,விரைவில் தமது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.இதையடுத்து மாலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “இன்று டெல்லியில் கமல்ஹாசனுடன் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.தமிழக அரசியல் நிலவரம் உள்பட எங்களுடைய இரண்டு கட்சிகளைப் பற்றி நாங்கள் விரிவாக விவாதித்தோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க