• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை:பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 20, 2018 தண்டோரா குழு

கோவையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல்,டீசல் விலைகளின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகிறது.இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க கோரி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக திரண்ட அக்கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் பெட்ரோலிய நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்துவிட்டு அரசே விலை நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறித்தினர்.

மேலும் படிக்க