• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றாலம் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி

June 20, 2018 தண்டோரா குழு

கோவையில் கடந்த 9 நாட்களாக மழையின் காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றலாம் இன்று மழை குறைந்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோவையில் உள்ள கோவை குற்றாலம் அருவியில் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால்,கடந்த 9 நாட்களாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் நேற்று மழை குறைந்ததால் சராசரி அளவுக்கு தண்ணீர் வருவதன் காரணமாக அருவியில் இன்று அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும்,கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்ததால் இதுவரை 110 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக வால்பாறையில் உள்ள சின்கோனா பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும்,குறைந்த பட்சமாக பொள்ளாச்சியில் 8 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.சிறுவாணி அணையில் இன்னும் ஐந்து அடி நிரம்பினால் அணையின் முழு கொள்ளளவை எட்டி விடும்.

மேலும் படிக்க