• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீர்ப்பு அனுகுண்டாகவும் இருக்கலாம், புஷ்வாணம் ஆகவும் இருக்கலாம் -தமிழிசை

June 14, 2018 தண்டோரா குழு

அ.தி.மு.க 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அனுகுண்டாகவும் இருக்கலாம், புஷ்வாணம் ஆகவும் இருக்கலாம் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகமே எதிர்பார்ப்பது இன்று மதியம் 1 மணிக்கு வர இருக்கும் 18 எம்.எல்.ஏ க்கள் மீதான தீர்ப்பை தான்.வர கூடிய தீர்ப்பு அனுகுண்டாகவும் இருக்கலாம்,புஷ்வானம் ஆகவும் இருக்கலாம். நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.மேலும், மத்திய அரசை ராகுல் காந்தி எவ்வளவு தான் குறை கூறினாலும் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதாகவும்,பா.சிதம்பரம் அவரது ஆட்சி காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி அவரது மகன் ஊழல் செய்ய துணை போனதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க