• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

June 5, 2018 தண்டோரா குழு

காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.

காவிரி விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் காலா படம் திரையிடப்படும் இடங்களில் பிரச்சனை வர வாய்ப்பிருப்பதால் கர்நாடகத்தில் படத்திற்கு தடை விதித்துள்ளனர்.

இதற்கிடையில்,படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் காலா படத்தை வெளியிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது.ஒரு படத்தை வெளியிட கோரி அரசை நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது.படக்குழுதான் அரசை அணுகி தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும்.

காலா பிரச்சனை குறித்து கர்நாடக அரசிடம் படக்குழு முறையிடலாம்.அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் கர்நாடகாவில் படம் வெளியானால்??? படத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க