• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாயான பிறகு கவர்ச்சி நடனம் ஆடுவது சரியா? – நடிகை கஸ்தூரியின் பதில்

June 2, 2018 தண்டோரா குழு

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் 2.0.

சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் முன்னணி நாயகர்களின் திரைப்படங்களையும் நகைச்சுவையாக விமர்சித்த படி இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.மேலும்,நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி நடனமும் இடம்பெற்றுள்ளது. நடிகை கஸ்தூரி டுவிட்டரில் ஆக்டிவ் ஆக இருப்பதால் அவ்வபோது அவரை டுவிட்டரில் பின் தொடரும் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் கஸ்தூரியை ட்விட்டரில் பின் தொடரும் ரசிகர் ஒருவர் கஸ்தூரியிடம் ”தாயான பிறகு கவர்ச்சி நடனம் ஆடுவது சரியா’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கஸ்தூரி

“இத்தகைய வழக்கமான தமிழ் மனநிலைதான் மாற வேண்டும் என நான் விரும்புகிறேன். கவர்ச்சியாக இருக்கும் பெண் அறிவுடையவளாக இருக்க மாட்டாள். அவள் தாய்மைக்குத் தகுந்தவள் அல்ல. அவள் நன்மதிப்புகளையும் கொண்டிருக்க மாட்டாள் என்றெல்லாம் வகுத்துவைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு நடிகரைப் பார்த்து, நீங்கள் ஏன் மதுபோதையில் இருப்பதுபோல் நடிக்கிறீர்கள், ஏன் கவர்ச்சியான பாடல்களுக்கு நடனமாடுகிறீர்கள், ஏன் காதல் காட்சிகளில் நடிக்கிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறோமா?” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க