• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குன்னூர் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறையை நவீனபடுத்த 5 லட்சம் நிதி மக்களைவை உறுப்பினர் தகவல்

June 2, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வார இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஊட்டியில் இருந்து கேத்தி வரையில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

பிற்பகல் 2.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. துவக்க விழாவில், தெற்கு கோட்ட துணை மேலாளர் சந்தரபால் கொடியசைத்து துவக்கி வைத்தார். கேத்தி சென்றடைந்த மலை ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகளை மக்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து,பத்திரிகையாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன்,
நீலகிரியில் மலை ரயில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதைப்போன்ற மலை ரயில் பயணம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதனை கருத்திற்கொண்டு குன்னூர் மலைரயில் நிலையத்தை நவீன படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறையை நவீனபடுத்தும் வகையில் 5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க