• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 84 லட்ச மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்

June 2, 2018 தண்டோரா குழு

கோவையில் 42 கட்டுகள் கொண்ட 84 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை கோவில்மேடு பகுதியில் மருதக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.இவர் மீது இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்றிரவு சாய்பாபா காலனியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்திடம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் விசாரணை நடத்திய போது அவரிடம் இருந்து நான்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.அப்போது ஆனந்த் காவல் துறையிடம் தான் தனியார் நிதி நிறுவனத்தில் தற்போது கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருவதாக கூறினார்.

ஆனால் அந்த நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என்பதை அறிந்த போலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவரது நண்பர் சுந்தர் என்பவர் வேலாண்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு இருவரும் சேர்ந்து கடந்த ஒன்றரை மாதமாக 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து காவல் துறையினர் சோதனை நடத்தி அங்கு உள்ள கலர் ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம் மற்றும் 42 கட்டுகள் கொண்ட 84 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். தற்போது கள்ள நோட்டு தடுப்பு பிரிவினர் ஆனந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க