• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பினாமி சொத்து குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு – மத்திய அரசு அறிவிப்பு

June 1, 2018 தண்டோரா குழு

பினாமி சொத்து குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கறுப்பு பணம் ஒழிப்பு மற்றும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலமாக பினாமி சொத்து மற்றும் பரிவர்த்தனை குறித்து தகவல் கூறலாம் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

திருத்தப்பட்ட வருமான வரி சட்டத்தின்படி,ஒருவரின் வரி ஏய்ப்பு அல்லது வெளிநாட்டில் சொத்து மறைத்து வைக்கப்பட்டது குறித்து,வருமான வரித்துறையின் விசாரணை அதிகாரிகளிடம் முறையாக தகவல் அளித்தால்,அவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும்.

அதைபோல்,வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அளிப்போருக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்றும் பினாமி சொத்து பரிவர்த்தனை குறித்த சட்டத்தின் கீழ்,பினாமி சொத்து மற்றும் பரிமாற்றம் தொடர்பாக தகவல் அளித்தால், அவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க