• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்றால் நடவடிக்கை – பானுமதி

May 31, 2018 தண்டோரா குழு

பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்றாலும்,18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலையை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் பானுமதி தெரிவித்துள்ளார்.

புகையிலை பயன்படுத்துவதால் இதய நோய் வருவதை தடுக்க வேண்டும் என்ற கருத்துருவை கொண்டு இந்த ஆண்டு புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில் கோவை மாவட்டத்தில் புகையிலை பொருட்களை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்க கூடாது என கடுமையாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும்,அதனை மீறி அவர்களுக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் பானுமதி தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்க கூடாது எனவும் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவ்வப்பொழுது சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும்,புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க