• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வியாபாரியிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை பறித்து சென்ற குரங்கு

May 31, 2018 தண்டோரா குழு

உத்திர பிரேதச மாநிலத்தில் மளிகை கடை வியாபாரியிடம் இருந்து குரங்கு ரூ. 2 லட்சத்தை பறித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரேதச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் விஜய் இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது ஊரில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து அவர் மகள் நான்ஸியிடம் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுத்தார்.

இதையடுத்து,இருவரும் வங்கியில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓடிவந்த குரங்கு சிறுமியின் கையில் இருந்த பணத்தை பறித்து சென்று ஓடியது.இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் அந்த குரங்கை துரத்தி சென்றார்.இதனை பார்த்த அந்த ஊர் மக்களும் குரங்கை துரத்தினர். ஆனால்,குரங்கு வேகமாக ஓடி ஒரு கட்டிடத்தின் மேல் உச்சியில் ஏறி அமர்ந்து பையில் இருந்த பணத்தை எடுத்து சுமார் ரூ.60 ஆயிரம் வரை கிழித்து எறிந்து விட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த குரங்கு,பையுடன் எடுத்து ஓடிவிட்டது.அந்த குரங்கிடம் இருந்து பணத்தை வாங்க வேண்டும் என அனைவரும் குரங்கின் பின் சென்றனர்.ஆனால் அந்த குரங்கு வேகமாக சென்று விட்டது. இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் விஜய் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் குரங்கை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க