• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யாரிடமும் வாய்ப்பு கேட்காமல் தானா வந்த ‘காலா’ பட வாய்ப்பு!

May 31, 2018 tamilsamayam.com

என்னுடைய 25 வருட சினிமா அனுபவத்தில் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை.‘காலா’ பட வாய்ப்பு தானாக எனக்கு அமைந்தது என்றார் ஈஸ்வரி ராவ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’.இந்தப் படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.இந்தப் படத்தை,லைகா நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது.இந்தப் படத்தில் நானா படேகர்,சமுத்திரக்கனி,ஈஸ்வரி ராவ்,சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் வருன் ஜுன் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார்.இந்த வாய்பபு வந்தது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:

“ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க பல ஹிரோயின்கள் தவம் கிடக்கின்றனர்.இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னால் நம்பமுடியவில்லை.இயக்குனர் ரஞ்சித் என்னை அழைத்து தேர்வு செய்தார். நான் சினிமாவில் 25 வருடங்களாக இருந்து வருகிறேன்.இதுவரை வாய்ப்பு கேட்டு யாரிடமும் சென்றதில்லை.‘காலா’ படத்தில் நடிக்கும் வாய்பபு தானாக வந்தது” என்றார் ஈஸ்வரி ராவ்.

மேலும் படிக்க