• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்சிக்கு தடை!

May 30, 2018 தண்டோரா குழு

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியை நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.இந்நிகழ்ச்சி குடும்ப பிரச்சினைகளை குறித்து தீர்வு காண்பதாக நடத்தப்பட்டு வந்தது.மக்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பும் இருந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் இந்நிகழ்ச்சி ஏழை மக்களின் அடிப்படை மற்றும் தனி மனித உரிமைகளை பாதிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.அதில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க