• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் காலா வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை

May 29, 2018 தண்டோரா குழு

கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ரஜினி பேசியிருப்பதால்,காலா படத்தை கர்நாடகத்தில் திரையிடமாட்டோம் என கர்நாடக விநியோகஸ்தர் அறிவித்துள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.ஏற்கனவே இப்படத்தின் டீசர்,ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.வரும் ஜூன் 7ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ரஜினி பேசியிருப்பதால் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு கன்னட அமைப்புகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க