• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துணை இராணுவத்தை அழைக்க தேவையில்லை தமிழக காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது – பொள்ளாச்சி ஜெயராமன்

May 24, 2018 தண்டோரா குழு

துணை இராணுவத்தை அழைக்கதேவையில்லை தமிழக காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது என சட்டமன்ற துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

இன்று சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் முதல்வருடன் பேசிக்கொண்டு இருந்தார்.திடீரென கூட்டதை விட்டு வெளியே சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.எதிர்கட்சி தலைவராக செயல்படுவதை எடுத்துக்காட்ட இவ்வாறு ஸ்டாலின் செய்துள்ளார்.இது போன்ற நிகழ்வுகளை அவர் கைவிட வேண்டும்.

தூத்துக்குடியில் நடந்ததை தெரிந்துகொள்ள விசாரணை ஆணையம் அமைத்துள்ளோம்.மக்களை துன்புறுத்தும் எண்ணம் அதிமுகவிற்கு கிடையாது.போராட்டத்தை சிலர் தூண்டிவிடுகிறார்கள். 200,300 ஓட்டுகூட இல்லாதவர்கள்,டெபாசிட் வாங்காதவர் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள மக்களை தூண்டி விடுகின்றனர்.ஊடங்கள்,போராட்டத்தை தூண்டுபவர்களை கண்டிக்க வேண்டும்.அதே வேளையில் போராட்டக்காரர்கள் என்ன செயலில் ஈடுபட்டார்கள்,காவலர்கள் ஏன் செய்தார்கள் என்பது ஒரு நபர் விசாரணை முடிவில் தெரியவரும்.

துப்பாக்கி சூடு சம்பவம் மனவேதனை தான்.பொத்தாம் பொதுவாக காவல்துறை மோசம் என சொல்வது தவறு.தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கின்றது.காவல்துறையை யாரும் மட்டம் தட்டக்கூடாது.துணை இராணுவத்தை அழைக்க வேண்டிய தேவையில்லை.தமிழக காவல் துறை சிறப்பாக செயல்படுகின்றனர்.

அரசியல் கட்சிகள் நாங்கள் இருப்பதை காட்டிகொள்ள போராடுகிறார்கள்.தூத்துக்குடி மக்களை சாந்தபடுத்தும் கடமை தங்களுக்கு உண்டு,மக்களை சாந்தப்படுத்துவோம்,கைவிட மாட்டோம்.அமைச்சர்களுக்கு தூத்துக்குடி செலவதில் தயக்கமில்லை நிச்சயம் தூத்துக்குடி செல்வார்கள்.தேவையில்லாத வதந்தியை பரப்ப கூடாது என்பதற்காக இணைய சேவையை தடுத்துள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதி கொடுத்தது திமுக.இந்த பிரச்சினைக்கு மொத்த காரணம் திமுக தான்.தூத்துக்குடி மக்களுக்கு இப்போது கசப்புணர்வு இருந்தாலும்,விரைவில் தாயின் மடியில் கண்டிப்பாக அமர்வார்கள்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க