• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

May 23, 2018 தண்டோரா குழு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகத்தில் மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் செயல்பட்ட ஆயிரத்து மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டன. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், நெடுஞ்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள தூரத்தை தனித்தனியாக கணக்கிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கன்வில்கர், நவீன்சின்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்து, தமிழக அரசு கடந்த 21ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி, இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வகைமாற்றம் செய்யப்பட்ட சாலைகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளை திறக்க இன்று அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் மூடப்பட்ட 810 டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேற்கொண்டு எதிர்மனுதாரர் ஏதேனும் விளக்கம் கேட்கவோ, மேல்முறையீடு செய்யவோ சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் படிக்க