• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி வழக்கு 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

May 14, 2018 தண்டோரா குழு

காவிரி தொடர்பான வழக்கு விசாரணையை மே 16ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவிரி வரைவு திட்ட அறிக்கையை 14-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி காவிரி நதிநீர் பங்கீடு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இன்று காவிரி வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.அப்போது நீதிமன்ற உத்தரவுபடி நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார்.காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

மேலும்,தீர்ப்பை செயல்படுத்தி நதி நீர் பங்கீட்டை உறுதி செய்ய காவிரி ஆணையம்,வாரியம் அல்லது குழு அமைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதையடுத்து,மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழகம்,கர்நாடகா,புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பதில் தர நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் காவிரி வழக்கு 16 ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்ப்பட்டது.

மேலும் படிக்க