• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

May 10, 2018 தண்டோரா குழு

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கை யார்களை அவதூறாக விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.இதற்கு தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கிடையில் பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்த விவகாரத்தில்,4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து,கைது நடவடிக்கைக்கு அஞ்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.மேலும்,மற்ற வழக்குகளை விசாரிப்பது போலவே எஸ்.வி.சேகருக்கு எதிரான வழக்கையும் காவல்துறை விசாரிக்க வேண்டும். எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க