• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதன்முறையாக பாலிவுட் படத்தை இயக்கும் விஷ்ணுவர்தன்

May 4, 2018 தண்டோரா குழு

தமிழில் ‘பில்லா’,’அறிந்தும் அறியாமலும்’,’பட்டியல்’ போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன்.கடைசியாக ஆர்யா கிருஷ்ணா நடிப்பில் உருவான யட்சன் படத்தை இயக்கினார்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன்,தற்போது தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளார்.முதன்முறையாக ஒரு பாலிவுட் படத்தை இயக்க இருக்கிறார்.இதுகுறித்த அறிவிப்பை பாலிவுட்டின் பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் வெளியிட்டுள்ளார்.

கார்கில் போரின் போது உயிர்த் துறந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் உருவாக இருப்பதாகவும்,அதில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீவஸ்தவா கதை எழுதுகிறார்.அடுத்த வருடம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க