• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் கடைகள் திறக்க இடம் இருக்கிறது.” நீட் தேர்வு நடத்த இடமில்லையா” – கார்த்திக் சுப்பராஜ்

May 4, 2018 தண்டோரா குழு

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் வருகின்ற ஞாயிற்றுகிழமை 6ம் தேதி நடக்கிறது.

தமிழகத்தில் மதுரை,நெல்லை,திருச்சி,கோவை,நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டுமே இந்த தேர்வுக்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் மாணவர்களுக்கு பலரும் உதவி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில்,இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை சாடி ட்வீட் செய்துள்ளார்.அதில், “எல்லாத் தெருக்களிலும் ஒயின்ஷாப் திறந்து வைக்க இடமிருக்கிறது.ஆனால், நீட் தேர்வு எழுதுவதற்குத் தமிழகத்தில் இடம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதா?உங்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
‘தமிழகத்தில் நீட் தேர்வைத் தடைசெய்’ என்பதில் இருந்து,‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்துங்கள்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.அருமையான விளையாட்டு.நம் குரல்களை உண்மையிலேயே அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களா?” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க