• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை !

May 3, 2018 தண்டோரா குழு

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருதுகளை வாங்க பாகுபலி தயாரிப்பாளர்,தமிழ் பட இயக்குநர் செழியன் உள்ளிட்ட 60க்கும் பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

2017ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த தமிழ் படத்துக்கான விருது ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூலெட் திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டது.இதையடுத்து,65வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.இந்நிலையில்,விருது வழங்கும் விழாவில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

ஏனெனில்,வழக்கமாக தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் தான் வழங்குவார்.ஆனால் இன்று நடைபெறும் விழாவில் குறிப்பிட்ட 11 பேருக்கு மட்டும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்குவார் என்றும் தகவல் வெளியானது.

இந்த தகவலயடுத்து விருது பெறுபவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கப்போவதாக 60க்கும் மேற்பட்டோர் அறிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிலருக்கு மட்டுமே விருது வழங்குவார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் உள்ளிட்டோர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க