• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி!

April 17, 2018 தண்டோரா குழு

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பணத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வட மாநிலங்களான மஹாராஷ்டிரா,ராஜஸ்தான்,உத்தர பிரதேசம்,மத்திய பிரதேசம்,டெல்லி மற்றும் தென் மாநிலங்களான கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் பணத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர்.இதனால்,தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஏராளமான மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும்,பணத்தட்டுப்பாடு காரணமாக,ஏடிஎம்கள் பணம் நிரப்பப்படாமால் இருப்பதால்,பல ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்பட்டு உள்ளன.இதனால் பொது மக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.இதையடுத்து,பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்துள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஸ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுபாஸ் சந்திர கார்க்,

பணத்தட்டுப்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு கூடுதலாக பணத்தை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளோம்.குறிப்பாக,500 ரூபாய் நோட்டுகளை5 மடங்குஅச்சிட திட்டமிட்டுள்ளோம்.அதாவது, ஒரு நாளைக்கு 500 கோடி நோட்டுகளை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்னும் சில நாட்களில் ரூ.2500 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட உள்ளோம்.ஒரு மாதத்தில் ரூ70,000-75,000 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட உள்ளோம்.அதனால்,விரைவில் பணத்தட்டுப்பாடு பிரச்னை நீங்கும் என்றார்.

மேலும் படிக்க