• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்மலா தேவியை விசாரிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த விசாரணை குழு வாபஸ்

April 17, 2018 தண்டோரா குழு

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த விவகாரத்தை விசாரிக்க காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த குழு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியாராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி.இவர் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது பெரும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து,பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்களும் சக மாணவ மாணவிகளும் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை நேற்று கைது செய்தனர்.அவரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில்,மாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை மதுரை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.அதைப்போல் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உத்திரவிட்டார்.

இந்நிலையில்,கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த விவகாரத்தை விசாரிக்க காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த குழு வாபஸ் பெறப்பட்டுள்ளது.மேலும்,ஆளுநர் உத்தரவுப்படி விசாரணை நடத்த உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்திற்கு பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க