• Download mobile app
09 Aug 2026, SundayEdition - 3833
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மன்னித்துவிடு ஆசிஃபா இந்த நாடு உனக்கான பாதுகாப்பை தரவில்லை -கமல்

April 13, 2018 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் சிறுமி ஆசிஃபா படுகொலைக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த சிறுமியை கோவிலுக்குள் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சிறுவன்,அரசு ஊழியர் உள்பட 7 பேர் மயக்க மருத்து கொடுத்து 3 நாட்கள் தொடர்ந்து வன்புணர்வு செய்துள்ளனர்.இறுதியில் அந்த சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.

ஆசிஃபாவின் படுகொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிஃபாவை கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அந்தச் சிறுமி உங்களுடைய சொந்த மகள் என்ற புரிதல் கூட ஏற்படவில்லையா. அவள் என்னுடைய மகள் இல்லை,ஆனால் ஒரு மனிதனாக,தந்தையாக,குடிமகனாக ஆசிஃபாவை பாதுகாக்கவில்லையே என்ற கோபம் வருகிறது.மன்னித்துவிடு ஆசிஃபா இந்த நாடு உனக்கான பாதுகாப்பை தரவில்லை. உன்னுடைய நீதிக்காக நான் போராடுவேன்,குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது உன்னைப் போன்ற நிலை எந்த குழந்தைக்கும் வராமல் இருக்க போராடுவேன்.உனக்காக துயரப்படுகிறேன்,என்றுமே உன்னை மறக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க