• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழில் அறிமுகமாகிறார் பிரியா பிரகாஷ் வாரியர்

April 12, 2018 தண்டோரா குழு

மலையாளத்தில் வெளியாகவுள்ள ஒரு அடார் லவ் எனும் படத்தில் மாணிக்க மலராய பூவி என்ற பாட்டின் மூலம் சமூக வலைத்தளத்தில் வைரலானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

அப்படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.இந்நிலையில்,விஜய் சேதுபதியின் ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இதனையடுத்து இவரது இயக்கத்தில் வெளியான படம் ‘காதலும் கடந்து போகும்’.இதிலும் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.இவ்விரு படங்களுமே ரசிகர்களிடையேவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, நலன் குமாரசாமி விஜய் சேதுபதி – இயக்குநர் தியாகராஜா குமாரராஜா கூட்டணியில் உருவாகும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு நீலன் கே.சேகர்,இயக்குநர் மிஷ்கினுடன் இணைந்து கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.இந்நிலையில்,நலன் குமாரசாமி இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதில் பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்கவுள்ளாராம்.எனினும்,விரைவில் பிரியா பிரகாஷ் வாரியர் அறிமுகமாகும் இந்த தமிழ் படம் பற்றிய இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க