• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐதராபாத் நடிகர் சங்க அலுவலகம் எதிரே தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம்

April 7, 2018 தண்டோரா குழு

திரைப்படத் துறையில் பெண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுவதாகப் ஐதராபாத் நடிகர் சங்க அலுவலகம் எதிரே தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி அண்மையில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெலுங்கு சினிமாவிலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாகவும் தன்னை அழைத்தவர்கள் லிஸ்ட்டை வெளியிட போவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், திரைப்படத் துறையில் பெண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுவதாகப் புகார் தெரிவித்து நடிகை ஸ்ரீ ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள பிலிம்ஸ் சாம்பார் அலுவலகம் முன்பு உடைகளைக் களைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திரைப்படத் துறையில், பெண்கள் பாலியல் ரீதியாகத் தயாரிப்பாளர்களாலும், மற்றவர்களாலும் சுரண்டப்படுவதாக் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து,   நடிகை ஸ்ரீரெட்டியை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

 

மேலும் படிக்க