• Download mobile app
09 Aug 2026, SundayEdition - 3833
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதுகெலும்பு அரிப்பு பாதிப்புக்கு கோவையில் வெற்றிகரமாக சிகிச்சை

April 6, 2018 தண்டோரா குழு

முதுகெலும்பு அரிக்கப்பட்ட உலகின் நான்காவது நபருக்கு கோவையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

ஈராக் நாட்டை சேர்ந்த நபருக்கு நாடாப் புழுவால் நடை இழந்த நிலையில்,அவருக்கு கோவையை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் அவருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளனர்.உலகில் முதுகெலும்பு அரிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு இந்தியாவில் முதல் முறையாக கோவையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

ஈராக் நாட்டை சேர்ந்த இப்ராஹின் முத்தர் என்பவர் ஹைடாடிட் என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நோய் நாய்,ஆடு,பன்றி போன்ற விலங்குகளின் உடலில் இருக்கும் நாடாப்புழுக்கள் கல்விகோல் வழியே வெளியேறி மனித உடலுக்குள் சென்று நுரையீரல் , ஈரல் முதுகெலும்பு, ஆகிய இடங்களில் தங்கி வளர ஆரம்பித்து அது கட்டியாக மாறுகிறது.

இத்தகைய நோயினால் கடந்த பத்து ஆண்டுகளாக அவதிப்பட்ட அவர், ஈராக்கில் சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.ஆனால் கால்கள் பலமிழந்து கடந்த ஆறு மாதங்களாக நடக்க முடியாமல் இருந்துள்ளார்.ஈராக் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியல் உள்ள தனியார் ஆர்த்தோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று உள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உலகில் நான்காவது நபராக முதுகெலும்பு அரிப்பால் பாதிக்கப்பட்டவர் இவர் என தெரிவித்து உள்ளனர்.இதனையடுத்து அவருக்கு ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து உள்ளனர்.தற்போது அவர் முழுமையாக குணமடைந்து தானாகவே நடந்து செல்வதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.இந்த நோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இந்த சிகிச்சை செய்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க