• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலைய விரிவாக்கம் தென்னை மரத்திற்கு உரிய இழப்பீடு தர கோரிக்கை

April 6, 2018 தண்டோரா குழு

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நிலையில்,விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கட்சிசார்பற்ற விவசாயிகள் மனு அளித்தனர்

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்காக தொடர்ந்து நிலம் கையெப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் போது அதில் உள்ள தென்னை மரங்களுக்கு உரிய விலை தரவில்லை என விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக விமான நிலையத்தின் அருகே செழிப்பாக உள்ளதால் தென்னை மரங்களில் இருந்து வருடத்திற்கு 200 தேங்காய் வரை கிடைப்பதால் அதிக லாபம் ஈட்டி வந்ததாகவும், இந்நிலையில் தற்போது அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்பதாக தெரிவித்துள்ளனர்.

எனவே ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும்,தங்களது கோரிக்கையை உடனடியாக ஏற்று சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

மேலும் படிக்க