• Download mobile app
09 Aug 2026, SundayEdition - 3833
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு

April 5, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தொழில் நகரான கோவை மாவட்டத்தில் இன்று(ஏப் 5)கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக தொழில் நகரான கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் பல நூறு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அரசு பேருந்துகள் 9௦% வரை இயக்கப்பட்டு வருகிறது.எனினும் வழக்கமாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் சூழலில் இன்று 20% அளவிற்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.பாதுகாப்பு கருதி கோவையில் இருந்து கர்நாடகா செல்லும் 52 பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மேலும் படிக்க