• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குழந்தை பிறக்கும் – கேரள பேராசிரியரின் சர்ச்சை பேச்சு

April 4, 2018 தண்டோரா குழு

ஒரு பெண், ஆண் போல உடை அணிந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை திருநங்கை குணம் கொண்டதாகவே இருக்கும் என கேரள பேராசிரியர் ஒருவர் கூறியுள்ள கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கல்லடியில் உள்ள பிரபல கல்லூரியில் ரஜித்குமார் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.சமீபத்தில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து பேசிய அவர்,ஒரு பெண்,ஆண் போல உடை அணிந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை திருநங்கை குணம் கொண்டதாகவே இருக்கும்.

கேரளாவில் ஏற்கனவே 6 லட்சம் திருநங்கைகள் உள்ளனர்.இப்போது இங்கு உள்ள பெண்கள் எல்லாம் ஜீன்ஸ் உடை அணிந்தால் திருநங்கை குணமுடைய குழந்தைகள் தான் பிறக்கும்.இது போன்ற பெண்களுக்கு ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்பு உள்ளது என்று பேசியுள்ளார்.

இந்நிலையில், இவரது பேச்சுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  பேராசிரியரின் பேச்சுக்கு கேரள திருநங்கைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க