• Download mobile app
17 May 2026, SundayEdition - 3749
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் முற்றுகை

April 4, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ) கட்சியினர் ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு இன்று (ஏப் 4)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதனிடையே ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஏதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், காவல் துறையினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க