• Download mobile app
09 Aug 2026, SundayEdition - 3833
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாய் கண்முன்னே மகனை கட்டி வைத்து அடித்த போக்குவரத்து காவலர்கள்

April 3, 2018 தண்டோரா குழு

தாய் கண்முன்னே மகனை போக்குவரத்து காவலர்கள் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் உள்ள துணிக்கடையில் இருந்து பிரகாஷ் என்கிற வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்தில் தனது தாய் மற்றும் தங்கையோடு சென்றுள்ளார்.மூன்று பேர் ஒரே வாகனத்தில் சென்றதாலும்,ஹெல்மெட் போடாததாலும் அவரை போலீசார் மடக்கிப் பிடித்து சட்டையை பிடித்து இழுத்து சென்றுள்ளனர்.அப்போது, என் மகனை விடுங்கள் என பிரகாஷின் தாய் ஆய்வாளரை தடுக்க, அவரை ஆய்வாளர் தாக்கியுள்ளார்.

தாயை தாக்கியதால் கோபமடைந்த பிரகாஷ் உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்துள்ளார்.இதில்,உதவி ஆய்வாளரின் தோளில் இருந்த ஸ்டார் உடைந்து கீழே விழுந்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் மற்றும், இரு உதவி ஆய்வாளர்கள் என மூவரும் சேர்ந்து பிரகாஷை கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.மேலும்,அவரின் கையை உடைக்க அவர்கள் முயற்சி செய்வதும், அதைக்கண்டு அவரது தாய் அலறி துடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க