• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஏப்ரல்9ல் விசாரணை – உச்சநீதிமன்றம்

April 2, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏப்ரல் 9ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.அப்போது, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டது.

ஆனால் கர்நாடக அரசோ, ‘ஸ்கீம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று தான் உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறதே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடவில்லை என்று கூறி வருகிறது.ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? அமைக்கப்படாதா? என்பது பற்றி மத்திய அரசு எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால ‘கெடு’ வியாழக்கிழமையுடன்  முடிவடைந்தது. காவிரி மேலாண்மை அமைப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் கடந்த சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.மேலும்,இந்த வழக்கை  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசு  கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், இதை ஏற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வருகிற 9 ந்தேதி திங்கக்கிழமை, விசாரணை நடைபெறும்  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க