• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைகோ கண்முன் மதிமுக தொண்டர் தீக்குளிப்பு

March 31, 2018 தண்டோரா குழு

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடத்திய  நடைபயணத்தில்  மதிமுக தொண்டர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்து மேடையை நோக்கி ஓடி வந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்ததை அடுத்து மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ, அந்த தொண்டரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதியுங்கள். இயற்கை அன்னை அந்த தொண்டரை எபப்டியாவது காப்பாற்றி தரவேண்டும்.தீக்குளிக்க வேண்டாம் என ஏற்கனவே நான் தொண்டர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன் எனக் கூறினார்.இதைதொடர்ந்து, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ தனது நடைபயணத்தை தொடங்கினார்.

மேலும் படிக்க