• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்த துபாய் இளவரசி

March 30, 2018 தண்டோரா குழு

கடல்வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்த துபாய் இளவரசியை இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீட்டு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும் துபாயின் இளவரசியுமான சேகா லத்தீபா குதிரையேற்றம், மலையேற்றம், பாரா கிளைடர், செயற்கை இறக்கையைக் கட்டிக் கொண்டு வானில் பறத்தல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஆர்வமுடையவர்.துபாய் பிரதமரான தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்பாத சேகா விரும்பவில்லை. இதனால், கடந்த 4ஆம் தேதி அமெரிக்க, பிரெஞ்ச் குடியுரிமையுள்ள தனது நண்பர் ஹெர்வ் ஜாபர்ட் என்பவருடன் நோஸ்ட்ரோமோ என்கிற படகில் ஏறிக் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார்.

இந்நிலையில்,இந்த தகவலை இந்தியக் கடலோரக் காவல்படையினர் அறிந்தனர். இதையடுத்து,சேகா வந்த படகைக் கோவா அருகே மடக்கியுள்ளனர்.பின்னர் சேகாவையும், அவர் நண்பர் ஹெர்வ் ஜாபர்ட்டையும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

மேலும் படிக்க