• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு அதிநவீன பேருந்து இயக்கம்

March 30, 2018 தண்டோரா குழு

பல்வேறு நவீன வசதிகளுடன் கோவையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு கர்நாடக அரசின் பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து பெங்களூருவிற்கு முதல் முறையாக நவீன வசதிகளுடன் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.இந்த பேருந்தில் கழிப்பறை வசதி மற்றும் பயணிகளுக்காக WIFI வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த பேருந்து கோவையில் இருந்து மதியம் 12மணிக்கு புறப்பட்டு இரவு 8 எட்டு மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தை சென்றடைகிறது.

மீண்டும் பெங்களூரு விமான நிலையத்த்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு  காலை 10.45 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்ய 1100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கபடுகிறது.தொழில் நகரான கோவையில் பெங்களூருவிற்கு அதிகளவிலான ரயில்களும் இயக்கபடாத  நிலையில் தற்போது நவீன வசதிகளுடன் பெங்களூருவிற்கு பேருந்து சேவை அறிமுகப்படுத்தி உள்ளது வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

மேலும் படிக்க